விக்ரம் நடித்துள்ள ‘துருவ நட்சத்திரம் ‘விரைவில் வெளியாகும்

இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம், ரித்து வர்மா, ஐஸ்வர்யா  ராஜேஷ் இணைந்து நடித்துள்ள படம் ‘துருவ நட்சத்திரம்‘. இப்படத்தின் படப்பிடிப்பு 2017-ம் ஆண்டு துவங்கிய நிலையில் பல்வேறு காரணங்களால் கிடப்பில் போடப்பட்டது. சில மாதங்களாக இந்த படம் மீண்டும் துவங்கப்பட்டு மீதமுள்ள காட்சிகள் படம் பிடிக்கப்படும் எனவும் விரைவில் திரைக்கு கொண்டு வரப்படவுள்ளதாகவும் தகவல் வெளியானது. விக்ரமும் மீதி காட்சிகளில் நடித்து கொடுத்துள்ளார். இதனையடுத்து இறுதிக்கட்ட பணிகள் துவங்கியுள்ளன. இன்று (பிப்ரவரி 25) படத்தின் பின்னணி இசை பணிகள் தொடங்கிவிட்டதாக இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

விரைவில் படம் திரைக்கு வரும் எனவும் திரையரங்குகளில் சந்திக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். விரைவில் இசைப்பணிகள் முடிந்ததும் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்