‘சங்கமித்ரா’ திரைப்படத்தின் பட்ஜெட் இவ்வளவா?-

‘சங்கமித்ரா’ திரைப்படத்தில் நடிகை பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரபல திரைப்பட நடிகரும், இயக்குநருமான சுந்தர்.சி-யின் கனவுப் படமான சங்கமித்ரா, 450 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் முன்னணி நடிகர்கள் விஷால் மற்றும் ஆர்யா ஆகியோர் நடிக்கவுள்ளனர்.

இந்த படத்தில் நடிக்க பூஜா ஹெக்டேவிடம் கால்ஷீட் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக, அவருக்கு சுமார் 4.5 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. இந்த படத்தில் நடிக்க உள்ள பிரபலங்களின் விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகவுள்ளது.

‘சங்கமித்ரா’ திரைப்படம் கடந்த 2017-ம் ஆண்டே தயாரிக்கத் திட்டமிட்டிருந்ததாகவும், 2018-ம் ஆண்டு நடைபெற்ற உலகம் முழுவதும் உள்ள முன்னணி திரைப்பிரபலங்கள் ஒன்றுக் கூடும் கேன்ஸ் திரைப்பட விழாவில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவாகவுள்ள இப்படத்தை, ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் மற்றும் லைகா நிறுவனம் இணைந்து தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்