மலையாளத்தில் மம்முட்டி தற்போது நடித்து முடித்துள்ள படங்களில் ஒன்று ‘காதல் தி கோர்‘. இப்படத்தில் கதாநாயகியாக ஜோதிகா நடித்து வருகிறார். நடிகை ஜோதிகா 25 வருட இடைவெளிக்கு பிறகு இந்த படத்தின் மூலம் மலையாளத்தில் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். அதுமட்டுமல்ல மம்முட்டியுடன் இவர் இணைந்து நடிப்பது இதுவே முதன்முறை ஆகும். இப்படத்தை மம்முடியின் சொந்த நிறுவனமான மம்முட்டி கம்பெனியே தயாரித்து வருகிறது. அவரது மகன் துல்கர் சல்மான் இந்தப்படத்தை ரிலீஸ் செய்துள்ளார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கிய நிலையில் தற்போது போஸ்ட் புரொடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தற்போது இந்த படம் வரும் மே 11-ம் தேதி ரிலீசாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.










