தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் ஜெயம் ரவி. இவர் நடிப்பில் கடந்த 2015-ம் ஆண்டு வெளியான படம் ‘தனி ஒருவன்‘. இப்படத்தை இயக்குனர் மோகன் ராஜா இயக்கியிருந்தார். மேலும் இதில் கதாநாயகியாக நயன்தாரா மற்றும் வில்லனாக அரவிந்த்சாமி நடித்திருந்த நிலையில், இப்படம் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து இதன் இரண்டாம் பாகத்தை இயக்கப்போவதாக சில மாதங்களுக்கு முன்பு இயக்குனர் மோகன் ராஜா அறிவித்திருந்தார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.
இந்நிலையில் கடந்த 2004-ம் ஆண்டு இவரின் இயக்கத்தில் வெளியான ‘எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி‘ என்ற படம் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றது. இதில் ஜெயம்ரவி, அசின், நதியா, பிரகாஷ்ராஜ், விவேக் என பலர் நடித்திருந்தனர். இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகத்தையும் அடுத்து இயக்கப் போவதாக இயக்குனர் மோகன்ராஜா அறிவித்துள்ளார். அதோடு அப்படத்தின் முதல் பாகத்தில் நதியா கேரக்டர் இறந்துவிடும் என்பதால் இந்த இரண்டாவது பாகத்தில் அவர் இல்லாமல் கதை தொடரும் என்று கூறும் மோகன்ராஜா, தனி ஒருவன் இரண்டாம் பாகத்தை அடுத்து, எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கவும் திட்டமிட்டுள்ளாராம்.










