விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலமானவர்கள் செந்தில் கணேஷ்-ராஜலெட்சுமி தம்பதியினர்.
இவர்கள் இந்நிகழ்ச்சிக்கு பிறகு சினிமாவிலும் பின்னணி பாடுவது, நடிப்பது என கலக்கி வருகின்றனர். அதிலும் ராஜலெட்சுமி தற்போது நடிகையாக அறிமுகமாகும் ‘லைசன்ஸ்‘ படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளது.
மேலும் இன்ஸ்டாகிராமிலும் செலிபிரேட்டியாக வலம் வரும் ராஜலெட்சுமி அடிக்கடி போட்டோஷூட், ரீல்ஸ் வீடியோ என ஆக்டிவாக இருந்து வருகிறார்.
இந்நிலையில் நேற்றைய தினம் 11-வது ஆண்டு திருமணநாளை கொண்டாடும் ராஜலெட்சுமி தனது கணவரின் காதலை நெகிழ்ந்து உருக்கமான பதிவு போட்டுள்ளார். பதிலுக்கு செந்தில் கணேஷும் ‘இறைவன் தந்த வரமே! என்னை உன்னை அன்றி யார் அறிவார்‘ என தனது காதலை வெளிப்படுத்தியிருக்கிறார். இருவருக்குமிடையேயான புரிதலையும், காதலையும் ரசிகர்கள் பாராட்டி வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்.










