வைரலாகி வரும் ‘ருத்ரன்‘ படத்தின் டிரைலர்…!

நடிகர் ராகவா லாரன்ஸ் தற்போது தயாரிப்பாளர் கதிரேசன் இயக்கத்தில் ‘ருத்ரன்‘ என்னும் படத்தில் நடித்து வருகிறார். இதில் கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சரத்குமார் நடித்துள்ளார். இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் என நான்கு மொழிகளில் தயாராகியுள்ள இப்படம் வருகிற ஏப்ரல் 14-ம் தேதி தமிழ் புத்தாண்டு தினத்தில் திரையில் வெளியாகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இதன் டிரைலர் வெளியிடப்பட்டுள்ளது. இரண்டு நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த டிரைலர் ஆக்ஷன் கதையில் உருவாகியுள்ளது. அதோடு ‘காஞ்சனா‘ படத்தில் இடம்பெற்றது போன்று கிளைமாக்ஸ் சண்டைக்காட்சியில் ஒரு அதிரடியான பாடலும் இடம் பெற்றுள்ளது. தற்போது இந்த ‘ருத்ரன்‘ பட டிரைலர் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்