வெப் தொடரில் என்ட்ரீ கொடுத்த நடிகை வாணிபோஜன்

தமிழில் ‘ஓ மை கடவுளே, லாக்கப், மிரள்‘ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள வாணி போஜன் தற்போது ‘செங்களம்‘ என்ற வெப் தொடரில் நடித்து இருக்கிறார். இதில் கலையரசன், ஷரத், விஜி, ஷாலி, மானஷா மற்றும் வேலா ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அபினேஷ் இளங்கோவன் தயாரிப்பில் எஸ்.ஆர்.பிரபாகரன் டைரக்டு செய்துள்ளார். இந்த கதை அரசியல் திரில்லர் கதையம்சம் கொண்ட தொடராக தயாராகியுள்ளது.

இந்த திகில் தொடரில் நடித்தது குறித்து, வாணி போஜன் கூறியதாவது, “ இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன் சொன்ன கதை பிடித்தது. ஆனால் இடையில் தந்தைக்கு உடல்நிலை சரியில்லாததால் நான் செய்யவில்லை என்றேன். ஆனால் எல்லோரும் எனக்கு ஆதரவளித்து இந்த கதாபாத்திரத்தில் நடிக்க வைத்துள்ளார்கள். இது எனக்கு மிகப்பெரிய ஆசீர்வாதம். இப்போது பார்க்கும்போது நான் ஒரு நல்ல படைப்பில் நடித்து இருக்கிறேன் என மகிழ்ச்சியாக உள்ளது“ என்றார்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்