இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் ‘இந்தியன் 2‘. இதில் கமலுடன் இணைந்து காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் பீரித்தி சிங், விவேக், மனோபாலா, சமுத்திரக்கனி, பிரியா பவானி சங்கர் பாபி சிம்ஹா உள்ளிட்ட பல முன்னணி பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
இப்படத்தை லைகா மற்றும் ரெட் ஜெயன்ட் என இரு நிறுவனங்களும் இணைந்து தயாரித்து வருகின்றனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.
இதற்கிடையில் நடிகர் பாபி சிம்ஹா சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் இந்தியன் 2 குறித்து ஒரு முக்கியமான தகவலை பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறியதாவது, “இந்தியன் தாத்தா நமக்கு சூப்பர் ஹீரோ மாதிரி.
இப்படம் மிக பிரமாண்டமாக உருவாகி வருகிறது. 100 சதவீதம் உறுதியாக சொல்கிறேன். விவேக் காட்சிகள் படத்தில் எதுவும் நீக்கப்படவில்லை. அதேபோல், இதுவரைக்கும் நீங்கள் பார்க்காத விவேக் படத்தில் காண்பீர்கள்“ என்று கூறியுள்ளார்.










