விரைவில் தயாராகும் ‘இந்தியன்-3‘ – உளறிய உதயநிதி

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், நடிகர் கமல் நடிப்பில் கடந்த 1996-ம் ஆண்டு வெளியான ‘இந்தியன்‘ திரைப்படம் மாபெரும் வரவேற்பை பெற்றது.  இதனைத் தொடர்ந்து தற்போது பல வருடங்கள் கழித்து மீண்டும் ‘இந்தியன் 2‘ –வை உருவாக்கி வருகிறார் இயக்குனர் ஷங்கர்.

இதில் கமலுடன் இணைந்து காஜல் அகர்வால், சமுத்திரக்கனி, ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், சித்தார்த், எஸ்.ஜே.சூர்யா என பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்து வருகின்றனர். இப்படத்தை லைக்கா நிறுவனத்துடன் இணைந்து ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவம் தயாரித்து வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடையும் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் ‘மாமன்னன்‘ படத்தின் புரொமோஷனில் கலந்து கொண்ட உதயநிதி ‘இந்தியன்‘ படத்தை பற்றிய அப்டேட் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், “ இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு சிறிது காலம் நீடிக்க காரணம் படத்தில் சிஜி வேலைகள் நடக்க உள்ளது.

இந்த படத்திற்காக இயக்குனர் ஷங்கர் மற்றும் கமல் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளனர். மேலும், இந்தியன் படத்தின் மூன்றாம் பாகம் தயாரிக்க திட்டம் இருக்கிறது. இதுகுறித்த பேச்சு வார்த்தைகள் நடந்து கொண்டிருக்கிறது “ என கூறியுள்ளார். இருப்பினும் இதுகுறித்து அதிகாரப்பூர்வமான தகவல் எதுவும் வெளிவரவில்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்