கடந்த 2017-ம் ஆண்டு ‘மீசைய முறுக்கு‘ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார் இசையமைப்பாளர் ஹிப்ஹாப் ஆதி. அதனைத்தொடர்ந்து ‘நட்பே துணை, நான் சிரித்தால், அன்பறிவு‘ உள்ளிட்டப் படங்கள் இவரது நடிப்பில் வெளியானது. ஹிப்ஹாப் ஆதி நடித்த ‘அன்பறிவு‘ படத்தை தயாரித்த சத்யஜோதி பிலிம்ஸ் ஆதியை வைத்து அடுத்து தயாரிக்கும் படம் ‘வீரன்‘.
இப்படத்தை ‘மரகத நாணயம்‘ புகழ் ஏ.ஆர்.கே சரவணன் இயக்குகிறார். மேலும் இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் தயாராகிறது. ஆதியுடன், அதிரா ராஜ், முனிஷ்காந்த், காளி வெங்கட், சசி செல்வராஜ் மற்றும் பலர் நடிக்கிறார்கள். தீபக் மேனன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு ஆதியே இசை அமைக்கிறார். படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்து மற்ற பணிகள் நடந்து வருகிறது. கோடை விடுமுறையில் படத்தை வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள்.
இந்நிலையில், தற்போது இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு இந்த படம் பேண்டசி எலிமென்ட்ஸ் கலந்த படம் என்று அறிவித்துள்ளனர். ஆதி இதற்கு முன்பு நடித்திராத வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மேலும், இவருடைய ஸ்டைலும் நடிப்பும் அவருடைய ரசிகர்களுக்கே புதிதான விஷயமாக இதில் இருக்கும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.










