நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘லியோ‘ படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு பரபரப்பாக வேகமாக நடந்து வருகிறது.
இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைவதற்கு முன்பாகவே விஜய்யின் அடுத்த பட அறிவிப்பு ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி வருகிறது. விஜய் நடிக்கும் அடுத்த படத்தின் அப்டேட் சில தினங்களுக்கு முன்பு வெளியாகி, அந்த படத்தைப் பற்றியும் பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன.
விஜய்யின் அடுத்த படமான இப்படத்தை வெங்கட் பிரபு இயக்கும் நிலையில், யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். மேலும் இப்படத்தை பற்றிய முழு அப்டேட் அவரின் பிறந்தநாளான ஜுன் 22-ம் தேதியன்று வெளியாகும் எனத் தெரிகிறது.
இப்படத்தை ‘மங்காத்தா, மாநாடு‘ படங்களை விடவும் வேறு ஒரு தளத்தில் சிறப்பாக படத்தைக் கொடுக்க வேண்டும் என்ற உத்வேகத்தில் வெங்கட் பிரபு இறங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.










