‘விக்ரம்‘ படத்தில் சூர்யா போல் ‘லியோ‘ படத்தில் அதிரடியாக களமிறங்கும் தனுஷ்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்து மாபெரும் அளவில் வெற்றியடைந்த படம் ‘விக்ரம்‘. இப்படத்தில் கடைசி 8 நிமிடங்கள் ரோலெக்ஸ் கேமியோ ரோலில் நடித்து மாஸ் காட்டியிருந்தார் நடிகர் சூர்யா. இந்நிலையில் இப்படத்திற்கு பின் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘லியோ‘. இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து சஞ்சய் தத், கவுதம் மேனன், அர்ஜுன், மிஷ்கின், திரிஷா மற்றும் பிரியா ஆனந்த் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர். மேலும் பகத் பாசில் முக்கிய ரோலில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் விக்ரம் படத்தில் எப்படி ரோலெக்ஸ் கதாபாத்திரத்தில் கேமியோவாக சூர்யா நடித்தாரோ, அதே போல் லியோ திரைப்படத்தில் நடிகர் தனுஷ் நடிக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது. இதனால் விஜய் மற்றும் தனுஷ் ரசிகர்கள் சர்ப்ரைஸ் ஆகியுள்ளார்கள். ஆனால், இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்