விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்‘ விரைவில் வெளியீடு – ரசிகர்கள் மகிழ்ச்சி!

நடிகர் விக்ரம் ‘பொன்னியின் செல்வன்‘ படத்தை அடுத்து தற்போது ‘தங்கலான்‘ படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இது ஒருபுறம் இருக்க கவுதம் மேனனின் இயக்கத்தில் அவர் நடித்து கொண்டு இருக்கும் படம் ‘துருவ நட்சத்திரம்‘. இப்படத்தின் படப்பிடிப்பு பல்வேறு பிரச்சனைகளால் தொடர்ந்து தடைப்பட்டு வந்தது. இப்படத்தில் விக்ரமுடன் ரிது வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ், சிம்ரன், பார்த்திபன், விநாயகன், ராதிகா சரத்குமார் உள்பட பலர் நடித்துள்ளனர். இசை மின்னல் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் தற்போது சென்னை நுங்கம்பாக்கத்தில் இந்த படத்தின் முக்கிய காட்சிகளை மீண்டும் படமாக்கி இருக்கிறார் இயக்குனர் கவுதம் மேனன். இதோடு இப்படத்தின் அனைத்து காட்சிகளும் படமாக்கப்பட்டு விட்டதாக தகவல் வெளியாகி உள்ளன. ஓரிரு காட்சிகள் மட்டுமே எஞ்சி உள்ளதாகவும், அதுவும் விரைவில் முடிந்துவிடும் என்கிறார்கள். இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் கிட்டத்தட்ட முடிவடைந்துவிட்டதால், தற்போது படமாக்கப்பட்ட காட்சிகளின் இறுதிகட்ட பணிகளும் நடத்தப்பட்டு விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது. இதனால் நீண்ட நாள் கிடப்பில் இருந்த ‘துருவ நட்சத்திரம்‘  விரைவில் வெளியாக போகிறது என அவருடைய ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்