தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, தற்போது வரை முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் கமல்ஹாசன். இவர் தற்போது இயக்குனர் சங்கர் இயக்கத்தில் ‘இந்தியன் 2‘ படத்தில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் தனது 234-வது படத்தில் நடிக்க இருக்கிறார். இவர் நடிப்பது மட்டுமில்லாமல் அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார். இவர் வாழ்நாளில் சிறந்த நடிகருக்கான பல தேசிய விருதுகளை பெற்றுள்ளார். ‘தேவர் மகன்‘ படத்தில் நடித்து மாநில மொழி படத்துக்கான தேசிய விருது வென்றார். மேலும் பத்மஸ்ரீ, பத்ம விபூஷன் விருதுகளையும்பெற்றுள்ளார். இந்நிலையில், கமல்ஹாசனுக்கு மே 27-ம் தேதி அபுதாபியில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அபுதாபியில் நடைபெறவிருக்கும் சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் கமல்ஹாசனுக்கு இந்த விருது வழங்கப்பட உள்ளது.










