வாக்காளர் பட்டியலில் ஆதார் எண் இணைப்பு கட்டாயமா – மத்திய அமைச்சர் பதில்

ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலில் இணைக்காதவர்கள் பெயர் நீக்கப்படுமா என்ற கேள்விக்கு மத்திய அமைச்சர் விளக்கம் அளித்தார்.

கடந்த காலங்களில் நடந்த தேர்தலில் வாக்குச்சீட்டு நடைமுறை இருந்து வந்தது. அதனை மாற்றி அமைத்து மின்னணு வாக்குப்பதிவு கொண்டு வரப்பட்டது. ஆனாலும், போலி வாக்காளர்கள் மூலம் வாக்குப்பதிவு நடப்பதாக, எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வந்தன. இதற்கான தேர்தல் ஆணையம் சார்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டன.

இதைதொடர்ந்து தேர்தல்களில் நேர்மையான வாக்குப்பதிவை உறுதி செய்யும் நோக்கில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதாரை இணைக்கும் நடவடிக்கையை மத்திய அரசு கொண்டு வந்தது. இதையொட்டி, கடந்தாண்டு தேர்தல் விதிகள் குறித்து சட்டத்தில் திருத்தம் செய்யப்பபட்டது.

அதன்படி வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதாரை இணைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதற்காக கடந்த ஆகஸ்ட் 1ம் தேதி முதல் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தேர்தல் ஆணையம் செயல்படுத்துகிறது.

இந்நிலையில் வாக்காளர் பட்டியலில் ஆதார் இணைப்பது குறித்து மக்களவையில், எம்பிக்களின் கேள்விகளுக்கு மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜூ பதில் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஏற்கனவே இருக்கும் வாக்காளர்கள் மற்றும் புதிய வாக்காளர்களிடம் ஆதார் எண்ணை விருப்பத்தின் அடிப்படையில் பெற்று பதிவு செய்ய அதிகாரிகளுக்கு தேர்தல் சட்டங்கள் (திருத்தம்) சட்டம்-2021 அனுமதியளித்துள்ளது. சமீபத்தில் அறிமுகப்படுத்திய படிவம் 6பி-ல் ஆதார் அங்கீகாரத்திற்காக வாக்காளர்களிடம் இருந்து ஒப்புதல் பெறப்பட்டது. எனினும் ஆதார் விவரங்களை பகிர்ந்து கொள்வதற்கான ஒப்புதலை திரும்ப பெறுவதற்கு எந்த வசதியும் இல்லை.

எனவே வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்காதவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படாது என்றார்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்