நடிகர் கிஷோர் ‘பசங்க‘ திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவார். இவர் சீரியல் நடிகை ப்ரீத்தியை காதலித்து வந்த நிலையில் சில நாட்களுக்கு முன் பெரியவர்கள் சம்மதத்தோடு இவரை திருமணம் செய்து கொண்டார். இதில் ப்ரீத்தி கிஷோரை விட நான்கு வயது பெரியவர்.
இந்நிலையில் சிலர் இருவரது வயது வித்யாசத்தை வைத்து நெகட்டிவாக கமெண்ட் செய்து வந்தனர். இதுகுறித்து திருமணம் முடிந்த கையோடு பேட்டி கொடுத்த தம்பதிகள் ‘வயது வெறும் நம்பர் தான்’ என்று கூறியுள்ளனர். மேலும், கிஷோர் தனது காதல் குறித்து கூறும்போது, ‘‘வயதை வைத்து பேசுபவர்களுக்கெல்லாம் நான் ஒன்று மட்டும் சொல்லிக்கொள்கிறேன்.
எனக்கு கிடைத்த பெண் போல உங்களுக்கும் கிடைத்தால் நிச்சயமாக இப்படி பேசமாட்டீர்கள். எங்கள் இருவருக்கும் பிடித்திருக்கிறது. வீட்டிலும் பிரச்சனை இல்லை. இப்போது திருமணத்தை முடித்துவிட்டோம். இதில் யாருக்கு என்ன பிரச்சனை‘‘ என ஓப்பனாக பேசி விமர்சனம் செய்தவர்களின் வாயை அடைத்துள்ளார்.










