வடிவேலுக்கு ‘மாமன்னன்‘ படத்தின் மூலம் புதிய மாற்றம் வருமா?

தமிழ் சினிமாவில் கிட்டதட்ட 20 ஆண்டுகளுக்கு மேலாக நகைச்சுவை புயலாக வலம் வந்துக்கொண்டிருந்தவர் நடிகர் வடிவேலு. இவர் இடையில் அரசியல் பிரச்சனையில் சிக்கிக்கொண்ட காரணத்தால் பட வாய்ப்புகளை இழந்தார். கடந்த பத்து ஆண்டுகளாக அவரது நடிப்பில் பத்துக்கும் குறைவான படங்களை வெளியாகியுள்ளன. இதில் அவர் கதாநாயகனாக நடித்த படங்களும் மற்றும் ஹீரோக்களுடன் காமெடி நடிகராக இணைந்து நடித்த படங்களும் அவருக்கு பெரிய அளவில் கைகொடுக்கவில்லை. சில மாதங்களுக்கு முன்பு இவர் ஹீரோவாக நடித்த ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்‘ படத்தை பெரிதும் எதிர்பார்த்தார். ஆனால் அந்த படமும் அவருக்கு தோல்வியை தந்தது.

இந்நிலையில் தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடித்துள்ள ‘மாமன்னன்‘ திரைப்படத்தில் மீண்டும் ஒரு முக்கியமான நகைச்சுவை கலந்த குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் வடிவேலு. தற்போது இந்த படத்தில் தனக்கான டப்பிங்கை துவங்கியுள்ளார் வடிவேலு. இது குறித்த புகைப்படங்களை தற்போது சோஷியல் மீடியாவில் வெளியாகியுள்ளன. இந்த படமாவது வடிவேலுவின் திரையுலக பயணத்தில் புதிய மாற்றத்தை கொண்டு வரும் என எதிர்பார்க்கலாம் என கூறப்படுகிறது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்