லோகேஷ் படத்தில் நடிக்கும் எண்ணம் எனக்கு இல்லை – நடிகர் பிரபாஸ் பேட்டி

தமிழ் திரையுலகில் அனைத்து நடிகர் மற்றும் ரசிகர்களாலும் தேடப்படுபவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இவர் ‘மாநகரம்‘ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து ‘கைதி, மாஸ்டர், விக்ரம்‘ என பல முன்னணி நடிகர்களை வைத்து இயக்கியுள்ளார்.

இவர் இயக்கத்தில் இதுவரை வெளியான அனைத்துப் படங்களும் மாபெரும் வெற்றியை பெற்றது. தற்போது இவர் நடிகர் விஜய்யை வைத்து ‘லியோ‘ படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இப்படத்தினை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தெலுங்கு முன்னணி நடிகர் பிரபாஸை வைத்து இயக்கப் போவதாக சில நாட்களுக்கு முன் தகவல் வெளியாகியிருந்தது.

இந்நிலையில் இதை நடிகர் பிரபாஸ் மறுத்துள்ளார். இதுகுறித்து பேட்டியில் பதிலளித்த பிரபாஸ், “ அவர்கள் கூறுவதில் உண்மை இல்லை. மேலும், அவருடன் இணையும் எண்ணம் இப்போதைக்கு எனக்கு இல்லை “ என தெரிவித்திருந்தார்.

இதனால் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் பிரபாஸ் நடிக்க வாய்ப்பு இல்லை என தெரிகிறது. மேலும் ‘லியோ‘ படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினியை வைத்து லோகேஷ் இயக்கப் போவதாக  இன்னொரு தகவல் வெளியாகியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்