‘லியோ‘ படம் பற்றி கௌதம் மேனன் பகிர்ந்த சுவராஸ்யமான தகவல்கள்

நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘லியோ‘ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் திரிஷா கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும் இவர்களுடன் இணைந்து பிரியா ஆனந்த், கௌதம் மேனன், மிஷ்கின், சஞ்சய் தத் என பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கி வரும் நிலையில், இப்படத்தின் தகவலும் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் இப்படம் குறித்து கௌதம் மேனன் பேசியுள்ள தகவல்கள் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

இளம் இயக்குனரான லோகேஷ் கனகராஜ் ‘விக்ரம்‘ படத்தின் வெற்றியை தொடர்ந்து பிஸியான இயக்குனராக மாறிவிட்டார். இவர் சினிமாவில் நுழைந்ததில் இருந்து இதுவரை ஒரு பிளாப் படம் கூட கொடுக்காமல் வெற்றிகரமான இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இதனால் பல முன்னணி நடிகர்களும் இவரது இயக்கத்தில் நடிக்க விரும்புவதாக கூறப்படுகிறது. தற்போது இவர் இயக்கத்தில் உருவாகி வரும் ‘லியோ‘ படத்தில் முதன்முறையாக விஜய் மற்றும் கௌதம் மேனன் இருவரும் இணைந்து நடித்து வருகின்றனர். இயக்குனரான கௌதமின் படத்தில் விஜய் நடிக்க வேண்டும் என ரசிகர்கள் நீண்ட காலமாக எதிர்பார்த்து வந்த நிலையில் தற்போது இருவரும் இணைந்து நடித்து வருவது ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பினை ஏற்படுத்தி வருகிறது.

இந்த நிலையில் ‘லியோ‘ படத்தில் இடம்பெற்றுள்ள தனது கேரக்டர் குறித்து கௌதம் மேனன் நேர்காணல் ஒன்றில் பேசியுள்ளது தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதில், “ லோகேஷ் கனகராஜ் எனக்கு ரொம்ப பிடிக்கும். இதில் என்னுடைய பேவரைட் திரிஷாவும் நடிக்கிறார்.

நாங்கள் இரண்டு பேரும் சேர்ந்து வருவதை போன்ற காட்சிகள் படத்தில் உள்ளது. என்னுடைய கேரக்டர் பெயர் ‘J‘ –வில் துவங்கும். இந்தப்படத்தில் எனக்கு பல ரோல் இருக்கு. வில்லன், நண்பன், பின்னணியில் இருக்கும் ஒரு ஆள் என மூன்று விதமான ரோல் உள்ளது என தெரிவித்துள்ளார். மேலும் தனது கேரக்டர் படத்தில் வெயிட்டாக இருக்கும் “ எனவும் தெரிவித்துள்ளார் கௌதம் மேனன். அவரின் இந்த பேட்டி ரசிகர்கள் இடையில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்