‘லியோ‘ படத்தில் இணைந்த மற்றொரு பிரபலம்…!

 

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘லியோ‘. இப்படம் வரும் அக்டோபர் மாதம் 19-ம் தேதி திரையில் வெளியாகிறது. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்து வரும் நிலையில், அனிருத் இசையமைத்து வருகிறார். மேலும் இப்படத்தில் கதாநாயகியாக திரிஷா நடித்து வருகிறார். காஷ்மீரில் இப்படத்தின் முதற்கட்ட 60 நாட்கள் படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளது. இதையடுத்து இப்போது சென்னையில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இந்த படத்தில் இன்னொரு நடிகர் இணைந்துள்ளார். ஏற்கனவே கவுதம் மேனன், மிஷ்கின், அர்ஜுன், மேத்தியூ தாமஸ், சஞ்சய் தத் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர். இவர்களை தொடர்ந்து தற்போது பிரபல மலையாள நடிகர் ஜோஜூ ஜார்ஜ்  என்பவரும் இந்த படத்தில் இணைந்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

 

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்