இயக்குனர் சசி இயக்கத்தில் நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த 2016-ம் ஆண்டு வெளியான படம் ‘பிச்சைக்காரன்‘. இந்த திரைப்படம் மாபெரும் வெற்றியை கொடுத்ததை தொடர்ந்து தற்போது இதன் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. இதன் இரண்டாம் பாகத்தை விஜய் ஆண்டனியே இயக்கி, நடித்துள்ளார்.
மேலும் சில நாட்களுக்கு முன் இப்படத்தின் படப்பிடிப்பின் போது விஜய் ஆண்டனிக்கு விபத்து ஏற்பட்டு அறுவை சிகிச்சை செய்து, பின் ஓய்வில் இருந்து சரியாகி உள்ளார். இதனால் இப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் தற்போது இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு பணிகள் நடந்து வருகின்றன. சமீபத்தில் இந்த படம் ஏப்ரல் 14-ம் தேதி அன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. அன்றைய தேதியில் ராகவா லாரன்ஸின் ‘ருத்ரன்‘ திரைப்படமும் ரிலீஸாக உள்ளது.
இதுதவிர மேலும் சில படங்களும் வெளியாக உள்ளன. இதனால் விஜய் ஆண்டனி இப்படத்தை எந்த போட்டியும் இல்லாமல் தனியாக வெளியிட வேண்டும் என மே மாதத்தில் வெளியிடலாம் என முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.










