ரஜினி கொடுத்த பரிசை எப்போதும் மறக்கமாட்டேன் – நடிகை தமன்னா மகிழ்ச்சி

நடிகர் ரஜினி தற்போது நெல்சன் இயக்கத்தில் நடித்துள்ள ‘ஜெயிலர்‘ படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகிறது.

இதில் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், மோகன்லால், சிவராஜ் குமார், ஜாக்கி ஷெராப், யோகி பாபு என பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் ஆகஸ்ட் 10-ம் தேதி திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் அடுத்தடுத்து அப்டேட்கள் வெளியாக உள்ளன.

விரைவில் அனிருத் இசையில் உருவான இப்படத்தின் பாடல் ஒன்று வெளியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தின் மூலம் நடிகர் ரஜினியுடன் முதன்முதலாக நடித்திருக்கிறார் நடிகை தமன்னா.

இதன் கடைசி நாள் படப்பிடிப்பின் போது தமன்னாவுக்கு, ஆன்மிக பயணத்திற்கான புத்தகம் ஒன்றை தனது கையெழுத்தை போட்டு பரிசாக அளித்திருக்கிறார் நடிகர் ரஜினிகாந்த்.

இதை பெற்றுக் கொண்ட தமன்னா, ரஜினி கொடுத்த இந்த பரிசை என்றென்றும் மறக்க மாட்டேன் என்று தனது நெகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருக்கிறார். மேலும் “ ரஜினி உடன் பணியாற்றியது கனவு நனவான தருணம். ஜெயிலர் படப்பிடிப்பில் நான் கழித்த நாட்களின் நினைவுகளை எப்போதும் நினைத்து பார்த்து ரசிப்பேன் “ என்று கூறியுள்ளார்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்