ரஜினியுடன் கைக்கோர்க்கும் லோகேஷ் கனகராஜ்…!

நடிகர் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஜெயிலர்‘ படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து அவரின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ‘லால் சலாம்‘ படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளார். அதனைத் தொடர்ந்து ரஜினிகாந்த் 170-வது படத்தை இயக்குனர் தா.செ.ஞானவேல் இயக்குகிறார்.

விரைவில் அந்த படத்தின் படப்பிடிப்பும் தொடங்க உள்ளது. இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு ரஜினிகாந்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சந்தித்துள்ளார். ரஜினியின் 171-வது படத்தை இயக்குமாறு லோகேஷ் கனகராஜ் உடன் பேச்சுவார்த்தை நடைபெற்றதாக கூறப்படுகிறது. இந்த படத்தை நடிகர் கமல்ஹாசனின் ராஜ் கமல் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்