தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவரின் நடிப்பில் தற்போது ரிலீஸ்க்கு தயாராகியுள்ள படம் ‘ஜெயிலர்‘. இப்படத்தை இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார். இதில் தமன்னா, ரம்யா கிருஷ்ண்ணன், சிவராஜ்குமார், சுனில், ஜாக்கி ஷெராப் என பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், வரும் ஆகஸ்ட் 10-ம் தேதி திரையில் வெளியாகிறது. இப்படத்தினை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் தனது மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் ‘லால் சலாம்‘ படத்தில் நடித்து வருகிறார். இதில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.
இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வரும் நிலையில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். கடந்த சில நாட்களாக ரஜினி சம்மந்தப்பட்ட காட்சிகள் பாண்டிச்சேரியில் படமாக்கி வந்த நிலையில், இந்த படத்தில் ரஜினிக்கு மனைவி கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை நிரோஷா ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இவர் எண்பது மற்றும் தொண்ணூறு காலக் கட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். இந்நிலையில் தற்போது இவர் குணச்சித்திர வேடங்களிலும், சீரியல் தொடர்களிலும் நடித்து வருகிறார்.










