தெலுங்கு சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர் விஜய் தேவரகொண்டா, அவர் கடைசியாக நடித்த ’லைகர்’ படம் அவருக்கு தோல்வி படமாக அமைந்தது. ஆனாலும் அவர் குஷி படத்தில் உற்சாகத்துடன் நடித்து வருகிறார்.
விஜய் தேவரகொண்டா ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி தனது ரசிகர்களை ஏதாவது ஒரு வகையில் மகிழ்விக்கும் வழக்கம் வைத்திருக்கிறார். கடந்த 5 ஆண்டுகளாக இதனை அவர் செய்து வருகிறார். இந்த ஆண்டு அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட 100 ரசிகர்களை சுற்றுலாவுக்கு அனுப்பி வைக்கிறார். மேலும், இது குறித்து அவர் கூறுகையில் 5-ஆண்டுகளுக்கு முன்பிருந்து இந்த நடைமுறையை நான் கடைபிடித்து வருகிறேன் என்று கூறியிருக்கிறார்.
இந்நிலையில், இந்த ஆண்டு அவர் தன்னுடைய ரசிகர்கள் 100 பேரை விடுமுறை கொண்டாட்டத்திற்காக சுற்றுலா தலங்களுக்கு அனுப்பி வைக்க உள்ளார் மேலும், அதற்கான செலவுகள் அனைத்தும் செலுத்தப்பட்டு விடும். எந்த இடம் என்பதை தேர்வு செய்ய எனக்கு உதவுங்கள் என குறிப்பிட்டுள்ளார் நடிகர் விஜய் தேவரகொண்டா.
இந்த பதிவுக்கு கீழ் இந்திய மலை பகுதிகள், இந்திய கடற்கரை பகுதிகள், இந்திய கலாசார சுற்றுலா, இந்தியாவின் பாலைவனம் ஆகிய சுற்றுலாவுக்கான 4 பொதுவான இடங்களை குறிப்பிட்டு உள்ளார். இந்த இடங்களில் ஒன்றை தேர்வு செய்யும்படி, அதற்கான வாய்ப்பையும் ரசிகர்களிடமே விட்டு உள்ளார். இதனால் இவரின் ரசிகர்கள் மிகவும் உற்சாகம் அடைந்துள்ளனர்.










