ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த ‘ஜெய் பீம்‘ மணிகண்டன்

கடந்த ஆண்டு நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ‘ஜெய் பீம்‘ படம் மாபெரும் வெற்றியை பெற்றது. அதில் ‘ராஜகண்ணு‘ என்ற கதாபாத்திரத்தில் அப்பாவித்தனமாக நடித்து நம்மை கண்கலங்க வைத்தவர் மணிகண்டன்.

அப்படத்திற்கு பிறகு அவர் கதாநாயகனாக நடித்து கடந்த வாரம் வெளிவந்த ‘குட் நைட்‘ படத்தில் நம்மை மீண்டும் ஒரு முறை காமெடி கலந்த கதாபாத்திரத்தில் நெகிழ வைத்திருக்கிறார். இப்படத்தில் ‘மோகன்‘ என்ற கதாபாத்திரம், அலுவலக நண்பர்களுக்கு ‘மோட்டார் மோகன்‘, காரணம் தூக்கத்தில் அவர் விடும் குறட்டை சத்தத்திற்காக அந்த பட்டப் பெயர்.

மோகன் கதாபாத்திரத்திலும் அவரது நடிப்பை ரசிகர்கள் வெகுவாக ரசித்து அவரைப் பாராட்டி வருகிறார்கள்.

இப்படத்திற்கான விமர்சனங்களும் பாசிட்டிவ்வாக இருப்பதால் படத்திற்கான தியேட்டர்களும், காட்சிகளும் அதிகரித்திருக்கிறது.  நடிகர் மணிகண்டன் 15 வருடங்களுக்கு முன்பு ‘கலக்கப் போவது யாரு‘ டிவி நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராகக் கலந்து கொண்டவர்.

அதனைத்தொடர்ந்து ‘பீட்சா 2‘ படத்தின் மூலம் வசனம் எழுதுபவராக சினிமாவில் நுழைந்து நடிகராகவும் மாறி, கதாநாயகனாகவும் வெற்றி பெற்றுவிட்டார்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்