ரசிகர்களின் கேள்விக்கு அதிரடியாக பதிலடி கொடுத்த நடிகை ஸ்ருதிஹாசன்

முன்னணி நடிகையான ஸ்ருதிஹாசன் ஆரம்பத்தில் டாப் நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வந்தார். அதன் பின்பு கொஞ்சம் கொஞ்சமாக தமிழ் சினிமாவில் மார்க்கெட் குறைய தொடங்கியது. அதன்பின் மும்பையில் செட்டிலாகி அவர் தெலுங்கு படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் ஸ்ருதிஹாசன் நடிப்பில் வெளியான ‘வீரசிம்ஹா ரெட்டி, வால்டர் வீரய்யா‘ போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் கமலை போலவே அவரது மகள் ஸ்ருதிஹாசனும் பல சர்ச்சைகளில் சிக்கி வந்தார்.

பல நடிகர்களுடன் கிசுகிசுக்கப்பட்ட அவர் வெளிநாட்டு டாட்டூ கலைஞரை காதலித்து வந்தார். இவர்கள் இருவரும் சமூக வலைத்தளத்தில் வெளியிடும் புகைப்படங்கள் சர்ச்சையை ஏற்படுத்தி வந்தது. ஆனால் இப்போது இவர்களுக்குள் ஏதோ பிளவு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் சமீப காலமாக தனது ரசிகர்களுடன் ஸ்ருதிஹாசன் உரையாடி வருகிறார். அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு சற்றும் தயங்காமல் பதிலளித்து வருகிறார்.  அந்த வகையில் ரசிகர் ஒருவர் ஸ்ருதிஹாசனிடம் நீங்கள் ‘வெர்ஜினா‘ என்று கேட்டிருந்தார். உடனே ‘வெர்ஜினா‘ என்ற வார்த்தையின் ஸ்பெல்லிங் கரெக்ட்டா எழுதுங்க என அவரை வாயடைக்க செய்து விட்டார் ஸ்ருதிஹாசன். ஏனென்றால் ரசிகர் அந்த வார்த்தையை பிழையாக எழுதி இருந்தார்.

அதேபோல் இன்னொரு ரசிகர் உங்களை டேட்டிங் செய்யலாமா என்று கேட்டிருந்தார். அதற்கு சட்டென்று ஸ்ருதிஹாசன் நோ என்று சொல்லிவிட்டார். இவ்வாறு சினிமாவில் உள்ள நடிகைகள் என்றால் பொது சொத்து என்பது போல ரசிகர்கள் சில நேரங்களில் அருவருப்பாகவும், எல்லைமீறியும் நடந்து கொள்கிறார்கள்.

சமீபத்தில் இதுபோன்று தான் ‘சூரரைப் போற்று‘ நடிகை அபர்ணா பாலமுரளிடம் ஒருவர் அருவருப்பாக நடந்து கொண்டார். இதற்கு பல நடிகைகள் கண்டனம் தெரிவித்து இருந்தனர். இதேபோல் ஸ்ருதிஹாசன் இடமும் எல்லை மீறி கேட்கும் கேள்விக்கு சரியான பதிலடியை தந்துள்ளார். ஒருவேளை நேராக இருந்தால் ஸ்ருதிஹாசன் அடிக்கவும் செய்திருப்பார்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்