ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ‘மார்க் ஆண்டனி‘ படத்தின் போஸ்டர்

நடிகர் விஷால் தற்போது ‘மார்க் ஆண்டனி‘ என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை ‘திரிஷா இல்லனா நயன்தாரா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன்‘ போன்ற படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வருகிறார். இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ரித்து வர்மா நடிக்கிறார். ஜி.வி பிரகாஷ் இசையமைக்கிறார். மேலும் எஸ்.ஜே.சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலானது. சில தினங்களுக்கு முன்பு இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் விபத்து ஏற்பட்ட வீடியோவும் இணையத்தில் வைரலானது.

இந்நிலையில் ‘மார்க் ஆண்டனி‘ திரைப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி இந்த படத்தின் மோஷன் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த மோஷன் போஸ்டர் சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்