யாஷிகா ஆனந்த் நடிக்கும் படத்தின் டிரைலர் வெளியீடு

ஜெனித்குமார் இயக்கத்தில் யாஷிகா ஆனந்த் கதையின் நாயகியாக நடித்துள்ள படம் ‘சைத்ரா‘. இப்படம் மார்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி வருகிறது. மேலும் இவருடன் இணைந்து இப்படத்தில் அவிதேஜ், சக்தி மகேந்திரா, பூஜா, ரமணன், கண்ணன், லூயிஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

பிரபாகரன் மெய்யப்பன் இசையமைக்கும் இந்த படத்திற்கு சதீஷ் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். 24 மணிநேரத்தில் நடக்கும் கதையை மையமாக வைத்து ஹாரர் திரைப்படமாக ‘சைத்ரா‘ உருவாகியுள்ளது.   இந்நிலையில் இப்படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த டிரைலர் சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்