முதன்முதலில் சுந்தர்.சி இயக்கத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி

தமிழ் சினிமாவில் ஹாரர் ஜானரின் அலை சற்று ஓய்வெடுத்திருக்கும் நிலையில் தற்போது மீண்டும் தலைதூக்க ஆரம்பித்திருக்கிறது. அந்த வகையில் ‘பிசாசு2‘ ரிலீசுக்கு தயாராக உள்ள நிலையில் ‘சந்திரமுகி2‘ உருவாகிக் கொண்டு வருகிறது. இந்த நிலையில் அந்த லிஸ்டில் மீண்டும் ஒரு ஹாரர் படம் இணைந்துள்ளதாகத் தெரிகிறது. சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான ‘அரண்மனை‘ படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து ‘அரண்மனை 2‘ மற்றும் ‘அரண்மனை 3‘ உள்ளிட்ட அடுத்தடுத்த பாகங்கள் வெளியான நிலையில் அதன் தொடர்ச்சியாக தற்போது அடுத்த பாகமான ‘அரண்மனை 4‘ படம் உருவாகவுள்ளது.

இப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் விஜய்சேதுபதி மற்றும் சந்தானம் கமிட்டாகியுள்ளார்கள். மேலும் ஹன்சிகா, ராஷிகண்ணா, ஆண்ட்ரியா உள்ளிட்டோரும் ஒப்பந்தம் செய்யப்பட்ட நிலையில் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் மூலம் முதல் முறையாகச் சுந்தர்.சி இயக்கத்தில் நடிக்கவுள்ள விஜய்சேதுபதி ‘பீட்சா‘ மற்றும் ‘அனபெல் சேதுபதி‘ படத்திற்கு பிறகு ஹாரர் ஜானரில் நடிக்கவுள்ளார்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்