விமான நிலையங்களில் கட்டுப்பாட்டு அறைகள் (NOTAM) செயல்பட்டு வருகின்றன. குறிப்பிட்ட விமான நிலையத்தின் எல்லைக்குள், விமானத்தை இயக்கும் விமானி அதன் கட்டுப்பாட்டு நிலையத்துடன் தொடர்பில் இருப்பார். அந்த கட்டுப்பாட்டு நிலையம் கொடுக்கும் தகவலின் அடிப்படையிலேயே விமானி விமானத்தை இயக்குவார். இதுபோன்ற அமெரிக்க விமானப் போக்கு வரத்துத் துறையின் NOTAM தொழில்நுட்பத்தில் திடீரென கோளாறு ஏற்பட்டது. இதனால், அமெரிக்கா முழுவதும் விமான சேவை முடங்கியது. 5,000-க்கும் மேற்பட்ட உள்நாட்டு, வெளிநாட்டு விமானங்கள் ஆங்காங்கே உள்ள விமான நிலையங்களில் தரையிறக்கப்பட்டன. இது அமெரிக்காவுக்கு அதிர்ச்சியை கொடுத்திருப்பதுடன், உலக அளவிலும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அமெரிக்க விமான சேவை முடங்கியதற்கான காரணம் என்ன என்கிற கேள்விகளும் எழுந்து நிற்கின்றன.
அதாவது, உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போரை துவக்கிய அடுத்த நிமிடத்தில் இருந்தே, அமெரிக்கா – ரஷ்யாவுக்கு இடையே மோதல் ஏற்ப்ட்டது. இந்த மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வந்து கொண்டே இருக்கிறது. ரஷ்யாவில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு கடலுக்கு அடியில், ராட்சத குழாய் மூலம் இயற்கை எரிவாயு விநியோகம் செய்யப்பட்டு வந்தது. அண்மையில் இந்த ராட்சத குழாய் மர்மமான முறையில் தகர்த்தெரியப்பட்டது.
இந்த சதியின் பின்னணியில் அமெரிக்கா இருக்கலாம் என்கிற தொனியில் ரஷ்யா குற்றச்சாட்டுக்களை முன் வைத்து வருகிறது. இந்த நிலையில் அமெரிக்காவை பழிவாங்கும் வகையில் ரஷ்ய ஹேக்கர்கள், அமெரிக்க விமானப் போக்குவரத்துத் துறையின் இணையக் கட்டமைப்பின் மீது தாக்குதல் நடத்தியிருக்கக்கூடும் என்றே சமூல வலைத்தளங்களில் செய்திகள் பரவி வருகின்றன. ரஷ்யா மட்டுமில்லாமல், சீனா, வடகொரியா உள்ளிட்ட ரஷ்யாவின் நட்பு நாட்டைச் சேர்ந்த ஹேக்கர்களும் இதுபோன்ற வேலைகளில் ஈடுபட்டு இருக்கலாம் என்றே செய்திகள் வெளிவருகின்றன.
இந்த நிலையில், இதுவரை விமான சேவை பாதிப்பு தொடர்பாக விளக்கம் எதுவும் கொடுக்காமல் இருந்து வந்த அமெரிக்க அதிபர் மாளிகை, அமெரிக்க வரலாற்றில் முதல்முறையாக விமான சேவை பாதிப்பு குறித்து விளக்கம் கொடுத்திருக்கிறது.
அதாவது, அமெரிக்க அதிபர் மாளிகை, “சைபர் தாக்குதல் நடந்ததாக தெரியவில்லை. எனினும், இந்த விவகாரம் குறித்து முழுமையாக விசாரணை நடத்தப்படும்” என்று தெரிவித்திருக்கிறது.










