நடிகர் ரஜினிகாந்த் இயக்குனர் வி.சி.குகநாதன் இயக்கத்தில் நடித்து கடந்த 1982-ம் ஆண்டில் வெளியான படம் ‘தனிக்காட்டு ராஜா‘. இதில் ஸ்ரீதேவி, சில்க் சிமிதா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
இப்படத்தை சுரேஷ் புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்தது. இளையராஜா இசையமைத்திருந்தார். அந்த காலகட்டத்தில் இப்படம் விமர்சனம் ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.
மேலும் இதுவரை இந்த படம் எந்த ஒரு தனியார் சேனல்களிலும் ஒளிபரப்பு ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக இந்த படத்தை ரீ ரிலீஸ் செய்ய தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருந்தது.
இந்தநிலையில் ஜூன் 17-ம் தேதியன்று தமிழகமெங்கும் உள்ள சில முக்கிய திரையரங்குகளில் மட்டும் ரீ மாஸ்டர் செய்து டிஜிட்டல் முறையில் வெளியானது. இதனை திருச்சி, மதுரை பகுதிகளில் உள்ள ரஜினி ரசிகர்கள் பட்டாசு வெடித்து, பால்குடம் மற்றும் நோட்டு புத்தகம் விநியோகம் செய்து புதிய படம் வெளியானது போல் கொண்டாடி வருகின்றனர்.










