மீண்டும் நடிப்பதில் களமிறங்கும் பிரபல நடிகை

தமிழ் சினிமாவில் 20 காலக் கட்டத்தில் கவர்ச்சி கன்னியாக வலம் வந்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பெற்றவர் நடிகை நமீதா. இவர் விஜய், அஜித், விஜய்காந்த், அர்ஜூன் என பல முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் ‘பிக்பாஸ் சீசன் 1‘ நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். அதன் பிறகு திருமணம் செய்து கொண்ட நிலையில், சினிமாவை விட்டு விலகியிருந்தார். இவருக்கு கடந்த வருடம் இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்தனர்.

இந்நிலையில் நடிப்பு மட்டுமின்றி நடிகை நமீதா பாஜக-வில் உறுப்பினராக இருந்து வருகிறார். குடும்பம் மற்றும் குழந்தைகளை கவனித்து வரும் அவர் தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க ஆர்வம் காட்ட தொடங்கியுள்ளார். அதற்காக தான் நமீதா தற்போது அதிகம் கவர்ச்சியான புகைப்படங்களை எடுத்து வெளியிட தொடங்கி இருக்கிறார் என்று கூறப்படுகிறது.

 

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்