மீண்டும் கொரோனா- மாநில அரசுகளுக்கு மத்திய அரசு ‘அலர்ட்’

பிஎப்.7 என்ற உருமாறிய கொரோனா தொற்று சீனா உள்ளிட்ட நாடுகளில் மீண்டும் அதிகரித்து வருகிறது. சீனா மட்டுமல்லாது, தென்கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளிலும் கொரோனா வேகமாக பரவி வருகிறது.

உலகம் முழுவதும் சராசரியாக தினமும் 6 லட்சம் வரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்தியாவிலும் தினமும் 153 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்ந்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்று பரவாமல் தடுக்க மத்திய அரசு அனைவரையும் அலர்ட் செய்துள்ளது. வரும் ஜனவரி 1ம் தொடங்கி புத்தாண்டு, பொங்கல் என அடுத்தடுத்த பண்டிகைகள் வருவதால் கொரோனா பரவாமல் தடுக்க மீண்டும் கட்டுப்பாடுகளை விதிக்க அரசு திட்டமிட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சமூக இடைவெளியை கடைப்பிடித்தல், முக கவச பயன்பாடு, கைகளைக் கழுவுவது உள்ளிட்ட கொரோனா நடத்தை விதிகளை பின்பற்றுவது குறித்து மக்களிடையே விழிப்புணர்வை உறுதி செய்ய மாநிலங்கள் கவனம் செலுத்த வேண்டும் என்றும் மத்திய அரசு அலர்ட் செய்துள்ளது.

இனி வெளிநாடுகளில் இருந்து விமானம் மூலம் இந்தியா வரும் பயணிகள் கடும் பரிசோதனைகள் நடத்த இன்று முதல் ஆயத்தப்பணிகள் தொடங்கி விட்டன. குறிப்பாக மக்கள் மீண்டும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்பதே அனைவரும் coronarx3g9Puதெரிந்து கொள்ள வேண்டிய உண்மை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்