மீண்டும் இயக்குனர் ஆக களமிறங்கும் பாரதிராஜா

எண்பது மற்றும் தொண்ணூறுகளில் முன்னணி இயக்குனராக வலம் வந்தவர் இயக்குனர் பாரதிராஜா. இவர் கடந்த சில ஆண்டுகளாக நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். கடந்தாண்டு வெளியான தனுஷின் ‘திருச்சிற்றம்பலம்‘ படத்தில் இவரின் நடிப்பு அதிகம் பேசப்பட்டது. இந்நிலையில் தற்போது இயக்குனர் தங்கர் பச்சானின் ‘கருமேகங்கள் கலைகின்றன‘, நிர்மல் குமார் இயக்கும் ‘நா நா‘ மற்றும் நித்திலன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் படம் என பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இதற்கிடையே இவர் மீண்டும் படம் இயக்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. இவரின் இயக்கத்தில் கடைசியாக ‘மீண்டும் ஒரு மரியாதை‘ என்ற திரைப்படம் வெளியானது. அதன் பின் நடிப்பில் ஆர்வம் காட்டி வந்தார்.

இந்நிலையில் தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொண்ட கதையை இயக்கி, நடிக்கவும் உள்ளார். ‘தாய்மெய்‘ என்ற தலைப்பில் இப்படம் உருவாக உள்ளது. மேலும் இதுபற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்