மீண்டும் இணையும் விஷ்ணு விஷால் மற்றும் ராம்குமார் கூட்டணி

நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் சமீபத்தில் ‘கட்டா குஸ்தி‘ படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து இவர் நடிப்பில் ‘மோகன்தாஸ்‘ படம் வெளியாக உள்ளது. மேலும் இதுதவிர ‘ஆர்யன்‘, ‘லால் சலாம்‘ என இரு படங்களில் நடித்து வருகிறார். இதையடுத்து, ‘எப்ஐஆர் 2‘ படத்திலும் நடிக்க உள்ளார்

இந்நிலையில் இவரை வைத்து ‘முண்டாசுப்பட்டி‘, ‘ராட்சசன்‘ என இரண்டு ஹிட் படங்களை தந்த இயக்குனர் ராம்குமார் உடன் மூன்றாவது முறையாக கூட்டணி அமைக்கிறார். விஷ்ணு விஷாலின் 21-வது படமாக உருவாகும் இதை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது. இது ராட்சசன் படத்தின் இரண்டாம் பாகமா அல்லது வேறு ஒரு படமா என்பது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்