மீண்டும் இணையும் கமல், மோகன்லால் கூட்டணி – பரபரப்பு தகவல்!

உலக நாயகன் கமல்ஹாசன் மற்றும் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் இவர்கள் இருவரும் மீண்டும் திரையில் இணையப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர்கள் இருவரும் 2009-ஆம் ஆண்டில் கமல்ஹாசன் நடித்த ‘உன்னைப்போல் ஒருவன் என்ற படத்தில் மலையாள நடிகர் மோகன்லால் முக்கியத்துவம் வாய்ந்த வேடத்தில் நடித்திருந்தார்.

தற்போது கமல் ‘இந்தியன்-2‘ படத்தில் நடித்து வரும் நிலையில், மோகன்லால் மலையாளத்தில் லியோ ஜோஸ் இயக்கத்தில் ‘மலைக்கோட்டை வாலிபன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் டைட்டில் போஸ்டர் சமீபத்தில் வெளியானது.

இந்த நிலையில் தற்போது இந்த ‘மலைக்கோட்டை வாலிபன்’ என்ற படத்தில் கமல்ஹாசனை ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க வைப்பதற்கு பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டால் 13 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கமல்ஹாசனும், மோகன்லாலும் இணைவது உறுதி ஆகிவிடும். 

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்