இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் கடந்த வரம் வெளியான படம் ‘மாமன்னன்‘. இதில் கீர்த்தி சுரேஷ், வடிவேலு மற்றும் பகத் பாசில் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ரெட் ஜெயண்ட் நிறுவனம் தயாரித்துள்ள நிலையில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த படம் விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மூன்று நாட்களுக்கு முன் வெளியான இந்தப்படம் வசூலில் உலகளவில் சாதனை படைத்து வருகிறது.
இந்நிலையில் இந்த படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் உதயநிதி, மாரி செல்வராஜ்க்கு மினி கூப்பர் கார் ஒன்றை அன்பளிப்பாக அளித்து அவரை மகிழ்வித்துள்ளார். இதனை போட்டோ உடன் தனது டுவிட்டர் பக்கத்தில் உதயநிதி நெகிழ்ச்சியாக பகிர்ந்துள்ளார். இது தொடர்பாக உதயநிதி வெளியிட்டுள்ள பதிவில், “ ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக விவாதிக்கிறார்கள். தங்களுடைய எண்ணங்களை கதையுடனும் களத்துடனும் தொடர்புபடுத்தி கருத்துகளை பகிர்கிறார்கள். உலகத் தமிழர்களிடையே விவாதத்துக்குரிய கருப்பொருளாக மாறியிருக்கிறது.
நம் தலைவர்கள் ஊட்டிய சுயமரியாதை உணர்வை, சமூகநிதி சிந்தனைகளை இளம் தலைமுறையினரிடம் விதைத்துள்ளது. வணிக ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றி. ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம், மாரி செல்வராஜ்க்கு மினி கூப்பர் கார் வழங்கி மகிழ்ந்தது. உலகம் முழுவதும் பறக்க ‘மாமன்னன்‘-க்கு றெக்கை அளித்த என் மாரி செல்வராஜ்க்கு நன்றி “ என உதயநிதி பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.










