தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் அனிருத். இவர் விஜய், அஜித், ரஜினிகாந்த், தனுஷ், கமல், சூர்யா, என பல முன்னணி ஹீரோக்களின் படங்களில் இசையமைத்துள்ளார்.
தற்போது ‘இந்தியன்-2, லியோ, ஜவான், ஜெயிலர்‘ உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இவர் தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு, இந்தி படங்களுக்கும் இசையமைத்து வருகிறார். இந்தியில் தற்போது ஷாருக்கான் நடிப்பில் அட்லீ இயக்கும் ‘ஜவான்‘ படத்திற்கு இசையமைத்து வருகிறார்.
இந்நிலையில் முதல் முறையாக மலையாள படத்திற்கு இசையமைக்கிறார் என்று செய்தி வெளியாகியுள்ளது.
அந்த தகவலின் படி, நடிகர் ப்ரித்விராஜ் அவரே இயக்கி நடிக்கும் புதிய படம் ‘டைசன்‘. இந்த படத்தின் மூலம் தான் அனிருத் மலையாள சினிமாவிற்கு அறிமுகமாகிறார் என கூறப்படுகிறது.
இப்படத்தை ‘கே.ஜி.எப்‘ படத்தை தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் தயாரிக்கின்றனர். இந்த படத்தின் மூலம் தான் அனிருத் மலையாள சினிமாவிற்கு அறிமுகமாகிறார் என கூறப்படுகிறது. அடுத்த வருடம் இப்படம் திரையில் வெளியாக உள்ளது.










