இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் கடந்த வாரம் ‘கஸ்டடி‘ திரைப்படம் வெளியாகியது. இப்படத்தில் தெலுங்கு நடிகரான நாகசைத்தன்யா கதையின் நாயகனாக நடித்திருந்தார்.
இவருக்கு ஜோடியாக கிருத்தி ஷெட்டி நடித்திருந்தார். இப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் நேரடியாக வெளியானது. இந்நிலையில் இப்படம் வெளியாகி இதுவரை 10 கோடி ரூபாய் கூட வசூலிக்கவில்லை என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இயக்குனர் வெங்கட் பிரபுவின் ‘சென்னை 28, சரோஜா, மங்காத்தா, மாநாடு‘ என பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.
ஆக்ஷன் படமான போலீஸ் கதையில் உருவான இந்தப் படத்தை பெரிதும் எதிர்பார்த்திருந்த நிலையில் இப்படம் தோல்வியடைந்தது படக்குழுவினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ‘கஸ்டடி‘ படம் நிச்சயம் பெரியளவில் நஷ்டத்தை சந்திக்கும் என்கிறார்கள்.










