இயக்குனர் ராஜமவுலி ‘ஸ்டூடண்ட் நம்பர் 1‘ படத்தில் தொடங்கி கடைசியாக வெளிவந்த ‘ஆர்.ஆர்.ஆர்‘ படம் வரைக்கும் தொடர் வெற்றிகளை மட்டுமே கொடுத்து வருகிறார். தற்போது நடிகர் மகேஷ் பாபுவின் 29-வது படத்தை இயக்கவுள்ளார். அதற்கான முன் தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார் ராஜமவுலி.
இந்த நிலையில் அவரது கனவு படமான மகாபாரதம் பற்றி பல இடங்களில் பேசியுள்ளார். அதேபோல் சமீபத்தில் ஒரு நேர்காணலில் அளித்த பேட்டியில் மகாபாரதம் பற்றி கூறியுள்ளார். அதன்படி, நான் மகாபாரதத்தை படமாக்க ஒரு சில வருடங்களோ அல்லது அதற்கும் மேல் கூட ஆகலாம். ஏனெனில் மகாபாரதம் பற்றி உள்ள அனைத்து விதமான புத்தகங்களை நான் தேடி படிக்கிறேன்.
ஆனால் இப்போது மகாபாரதம் பற்றி என்னிடம் நீங்கள் கேட்டால் என்னால் உறுதியாக ஒரு விஷயம் சொல்ல முடியும், மகாபாரதத்தை குறைந்தது 10 பாகங்கள் கொண்ட படங்களாக தான் உருவாக்க முடியும் என்று தெரிவித்துள்ளார்.










