‘பேச்சுலர்‘ படத்தில் நடிக்கததற்கு விளக்கமளித்த நடிகை வாணி போஜன்…!

 

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு சென்றவர் நடிகை வாணி போஜன். இவர் தற்போது வெள்ளித்திரையில் பிஸியான நடிகையாக வலம் வருகிறார். அவரது நடிப்பில் ‘கேசினோ, பகைவனுக்கு அருள்வாய், பாயும் ஒளி நீ எனக்கு‘ உட்பட இன்னும் சில படங்கள் ரிலீஸுக்கு தயராகி வருகின்றன. வாணி போஜனின் மிரட்டலான நடிப்பில் வெளியான ‘செங்களம்‘ வெப்தொடருக்கும் பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருகிறது. இந்நிலையில், சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய அவர் ‘பேச்சுலர்‘ பட வாய்ப்பை தவறவிட்டது குறித்து மனம் திறந்துள்ளார். பேச்சுலர் படத்தில் முதலில் ஜி.வி.பிரகாஷுடன் வாணி போஜன் தான் நடிக்க இருந்தார். ஆனால், படத்தில் ஹீரோக்கும், ஹீரோயினுக்கும் இடையில் நெருக்கமான காட்சிகள் அதிகம் வரும்.

சீரியல் மூலம் சினிமாவில் என்ட்ரி கொடுத்த வாணி போஜனுக்கு இது போன்ற காட்சிகளில் நடித்தால் மக்கள் தன்னை ஏற்றுக் கொள்வார்களா? என்ற பயம் வந்துள்ளது. அதேசமயம் தனக்காக படத்திற்கு தேவையான நெருக்கமான காட்சிகளையும் மாற்றி அமைக்கக்கூடாது என்று யோசித்த அவர் அந்த படத்தில் இருந்து விலகிவிட்டதாக கூறியுள்ளார்.

 

 

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்