இயக்குனரும், நடிகருமான எஸ்.ஜே.சூர்யா தற்போது ராதாமோகன் இயக்கத்தில் ‘பொம்மை‘ படத்தில் நடித்துள்ளார். இதில் கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்நிலையில் ‘பொம்மை‘ படத்திற்காக பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. இதில் ‘மான்ஸ்டர்‘ படத்திற்குப் பிறகு மீண்டும் பிரியா பவானியுடன் ஜோடி சேர்ந்து நடித்த காரணம் என்ன என்ற கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த எஸ்.ஜே.சூர்யா பிரியா பவானியை சிம்ரனுடன் ஒப்பிட்டுப் பேசியுள்ளார். அதில், “ எங்கா அக்கா பொண்ணுக்கு கிட்டதட்ட பிரியா பவானி சங்கரோட சாயல் இருக்கும். சிம்ரம் மேடம் பாத்தீங்கன்னா, அந்த பேஸ் கட் இருக்கும். திரிஷாவுக்கும் இருக்கும். முகத்துல ஒரு கட் இருக்கும், அந்த கட் இருந்ததுன்னா ஒரு முகத்துக்கும் இன்னொரு முகத்துக்கும் பொருத்தமா இருக்கும். ஷாருக்கானுக்கும், கஜோலுக்கும் அப்படி இருக்கும். அதுக்கு என்ன காரணம்னு சொல்ல முடியாது.
எனக்கும் பிரியாவுக்கும் ஒரு மேத்தமேடிக்கல் பியூச்சர்ஸ் செட் ஆகுது. அதுவும் ஒரு காரணமா இருக்கலாம். ‘தொட்டால் பூ மலரும்‘ பாட்டுல நானும் சிம்ரனும் இருந்த ஸ்டில்லையும், ‘பொம்மை‘ படத்துல நானும், பிரியாவும் இருந்த ஸ்டில்லையும் இதுக்கு முன்னாடி ஒண்ணா போட்டிருந்தேன். சிம்ரன் மாதிரியே பிரியா இருந்தாங்க. ‘மான்ஸ்டர்‘ படத்தோடு வெற்றி, நல்லாவும் நடிச்சாங்க. அதனால் தான் இந்த படத்துல மீண்டும் ஜோடியா நடிச்சிருக்காங்க“ என்று எஸ்.ஜே.சூர்யா கூறியுள்ளார்.










