பிரபல நடிகையுடன் டேட்டிங் செய்து வரும் நாக சைதன்யா

நடிகர் நாகசைத்தன்யா தமிழ் சினிமாவில் பிரபலம் கிடையாது. ஆனால் இவர் நடிகை சமந்தாவை திருமணம் செய்து கொண்டதன் மூலம் இங்குள்ள ரசிகர்களாலும் கவனிக்கப்பட்டார். இதுவரை தெலுங்கில் மட்டுமே சில ஹிட் படங்களை கொடுத்துள்ளார். நாகார்ஜுன் மகனான இவர் மற்ற மொழிகளில் இதுவரை படங்களில் நடிக்க ஆரம்பிக்கவில்லை. சமந்தாவை விவாகரத்து செய்தபின் நடிகர் நாக சைதன்யா பொன்னியின் செல்வன் பட புகழ் நடிகை சோபிதாவை டேட்டிங் செய்வதாக கூறப்பட்டது.

அதற்கு ஏற்றார் போல் அண்மையில் இருவரும் லண்டனில் சுற்றி வந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அதிகம் வைரலானது. லண்டனில் ஒரு செப்வுடன் நாக சைத்தன்யா புகைப்படம் எடுக்க அந்த புகைப்படத்தில் அவர்களுக்கு பின்னால் நடிகை இருக்க அதைப்பார்த்த ரசிகர்கள் இருவரும் டேட்டிங் செய்வது உறுதி என புகைப்படத்தை வைரலாக்கி வருகிறார்கள்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்