இயக்குனர் பாலா இயக்கத்தில் கடந்த வருடம் ஆரம்பமான படம் ‘வணங்கான்‘. இப்படத்தில் ஹீரோவாக நடிகர் சூர்யா நடித்து வந்தார். இவருக்கு ஜோடியாக கிர்த்தி ஷெட்டி நடித்தார். மேலும் கன்னியாகுமரியில் ஒரு சில நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்ற நிலையில் சூர்யா படப்பிடிப்பை விட்டு கிளம்பியதாக செய்திகள் வெளிவந்தன. அதன்பிறகு அப்படத்திலிருந்து சூர்யா விலகுவதாக பாலா அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்தார். அதன்பின் அப்படத் தயாரிப்பிலிருந்து விலகுவதாக சூர்யாவுக்குச் சொந்தமான 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனமும் அறிவித்தது.
இந்த நிலையில் அந்தப் படத்தில் சூர்யாவுக்கு பதிலாக தற்போது அருண் விஜய் நடிக்க கமிட் ஆகியுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பை பாலா மீண்டும் ஆரம்பித்துள்ளார். இதன் படப்பிடிப்பின் சில புகைப்படங்கள் தற்போது வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.










