தமிழ் சினிமாவில் 20 காலக்கட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஜோதிகா. இவர் கமல், ரஜினி, விஜய், அஜித், சூர்யா, விக்ரம் என பல முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்துள்ளார். இவர் பிஸியாக நடித்துகொண்டு இருந்த காலத்திலேயே நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் திருமணத்திற்கு பின்பு ஒரு இடைவெளி விட்டு மீண்டும் திரையுலகில் நுழைந்து தற்போது நடித்து வரும் ஜோதிகா முழுக்க முழுக்க நடிப்புக்கு தீனி போடும் கதாபாத்திரங்களாகவே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
அந்த வகையில் தற்போது வெளியாகி உள்ள காதல் ;தி கோர் என்கிற மலையாள படத்தில் மம்முட்டியின் ஜோடியாக நடித்துள்ளார். இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசும்போது, “என்னுடைய ஆரம்ப காலகட்டத்தில் நான் பிரபல ஹீரோக்களின் படங்களில் நடிப்பதற்கே முக்கியத்துவம் கொடுத்து கவனம் செலுத்தினேன். 17 வயதில் சினிமாவில் நுழைந்ததால் எனக்கு அப்போது சினிமா குறித்த புரிதல் அப்படித்தான் இருந்தது. பிரபல ஹீரோக்களின் படங்களில் நடிக்கும் போது நாமும் விரைவில் பிரபலம் அடையலாம் மற்றும் நல்ல வருமானமும் கிடைக்கும் என்பதால் அப்படி படங்களை தேர்ந்தெடுத்து நடித்தேன்.
ஒரு கட்டத்தில் நல்ல கதாபாத்திரங்களும், கதையும் தான் நம்மை நீண்ட காலத்திற்கு ரசிகர்கள் மனதில் நிலைத்திருக்க செய்யும் என முடிவெடுத்து கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து எனது படங்களை தேர்வு செய்ய ஆரம்பித்தேன். தற்போது நடித்துள்ள இந்த காதல் ;தி கோர் படமும் அப்படி நடிப்புக்கு தீனி போடும் ஒரு படம் தான்“ என்று கூறியுள்ளார்.










