சில வருடங்களுக்கு முன் தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை சிம்ரன். இவர் சினிமாவில் பல வருடங்களாக இருந்தும் தனது 46-வது வருடத்தில் தான் 50 வது படத்தை தொட்டு இருக்கிறார். ஆரம்பத்தில் முன்னணி நடிகர்களான விஜய், அஜித், சூர்யா போன்ற ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்தார். அதுவும் ஹீரோக்களை மிஞ்சும் அளவுக்கு சிம்ரன் நடனம் ஆடுவார். இந்நிலையில் தனது மார்க்கெட் குறைய தொடங்கியவுடன் கிடைக்கும் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். வில்லி, அம்மா, அக்கா போன்ற கதாபாத்திரங்களில் நடிக்கிறார். கடைசியாக ராக்கெட் தி நம்பி விளைவு படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
இந்நிலையில், சிம்ரன் தனது 50-வது படமான ‘சப்தம்‘ படத்தில் நடிக்கிறார். இதற்கான போஸ்டர் வெளியாகியுள்ளது. ‘ஈரம், குற்றம் 23‘ போன்ற படங்களை இயக்கிய அறிவழகன் இந்த படத்தை இயக்கி வருகிறார். மேலும் ஈரம் பட கதாநாயகன் ஆதி இப்படத்திலும் ஹீரோவாக நடிக்கிறார். மேலும் ‘சப்தம்‘ படத்தில் லட்சுமி மேனனும் நடிக்கிறார். இந்த படம் ஹாரர் திரில்லர் படமாக பிரம்மாண்ட பட்ஜெட்டில் எடுக்க திட்டமிட்டுள்ளனராம். இந்த போஸ்டரில் சிம்ரனை பார்க்கும்போது வில்லி கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தெரிகிறது.
இப்போது படப்பிடிப்பு விரைந்து நடைபெற்று வருகிறது. மேலும் சப்தம் படத்தில் சிம்ரன் கதாபாத்திரம், மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். தற்போது இப்படத்தின் போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.










