நடிகர் சிம்பு தற்போது ‘சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை‘ ஆகிய படங்களை இயக்கிய ஒபலி என்.கிருஷ்ணா இயக்கத்தில் ‘பத்து தல‘ என்னும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இதில் சிம்புவுடன் இணைந்து கௌதம் மேனன், கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கலையரசன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். கன்னடத்தில் 2017-ம் ஆண்டு வெளியான ‘முஃப்தி‘ திரைப்படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகும் இந்த படத்தில் ஏஜிஆர் என்ற கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் சிம்பு நடித்துள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகின்றன. இதனிடையே நடிகர் சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு, கடந்த பிப்ரவரி 3-ம் தேதி நள்ளிரவு 12.06 மணிக்கு ‘பத்து தல‘ படத்தில் இருந்து ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள ‘நம்ம சத்தம்‘ என்ற பாடல் வெளியிடப்பட்டது. ஏ.ஆர்.ரஹ்மான் பாடியுள்ள இந்த பாடல், ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் புதிய அப்டேட் வருகிற மார்ச் 3-ம் தேதி வெளியாகும் என படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.










