நடிகர் மிர்ச்சி சிவா இயக்குனர் கண்ணன் இயக்கத்தில் நடித்து முடித்த படம் ‘காசே தான் கடவுளடா‘. இதில் பிரியா ஆனந்த் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் இணைந்து யோகி பாபு, ஊர்வாசி, கருணாகரன், ஷிவாங்கி, புகழ், தலைவாசல் விஜய், விடிவி கணேஷ் மற்றும் மனோபாலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இப்படம் கடந்த ஆண்டு ரிலீசுக்கு தயாரான நிலையில் தியேட்டர்களில் வெளியிடக் கூடாது என அந்த படத்திற்காக கடன் கொடுத்த ஒருவர் வழக்கு தொடர்ந்தார். இதனால், பணத்தை திருப்பி கொடுக்காமல் ‘காசே தான் கடவுளடா‘ படத்தை வெளியிட மாட்டோம் என தயாரிப்பு நிறுவனம் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் இந்த படத்திற்கான அனைத்து பிரச்சினைகளும் தற்போது முடிவடைந்ததை அடுத்து ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் வருகிற மார்ச் 24-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.










