படப்பிடிப்பை நிறைவு செய்த ‘சந்திரமுகி-2‘ படக்குழு

இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் தற்போது ‘சந்திரமுகி-2‘ திரைப்படம் உருவாகி வருகிறது. இதன் முதல் பாகம் 2005-ல் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது 17-வருடங்கள் கழித்து மீண்டும் இதன் இரண்டாம் பாகத்தை உருவாக்கி வருகின்றனர். ‘சந்திரமுகி‘ முதல் பாகத்தில் நயன்தாரா, ரஜினிகாந்த், பிரபு, மாளவிகா, ஜோதிகா, நாசர், வடிவேலு என பல முன்னணி பிரபலங்கள் நடித்திருந்த நிலையில், படம் சூப்பர் ஹிட் ஆனது.

இந்நிலையில் தற்போது தயாராகியுள்ள இதன் இரண்டாம் பாகத்தில் கங்கனா ரணாவத், வடிவேலு, ராதிகா என உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இதன் இரண்டாம் பாகத்தையும் இயக்குனர் பி.வாசு இயக்கியுள்ள நிலையில், லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. எம்.எம் கீரவாணி இசையமைத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு தொடர்பான புகைப்படங்களை படக்குழு அவ்வப்போது சோஷியல் மீடியாவில் வெளியிட்டு வந்தனர். இந்நிலையில் தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இதை படக்குழு புதிய போஸ்டர் வெளியிட்டு தெரிவித்துள்ளனர்.

 

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்